ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், போலிகள், செம்மொழி மாநாட்டுப் போர்வையில் கருணாநிதியின் மீட்பு முயற்சி!

ராஜராஜன்-லோகமாதேவி செப்புத் திருமேனிகள், போலிகள், செம்மொழி மாநாட்டுப் போர்வையில் கருணாநிதியின் மீட்பு முயற்சி!

Calico Museum-Sarabhai foundation

கல்வெட்டுகளின் படி ராஜராஜ சோழன் பதுமையின் உயரம்: கல்வெட்டு ஆதாரமாக, உலோக சிலைகள் செய்யப்பட்ட விவரங்கள் இவ்வாறுள்ளன: ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் ஶ்ரீகார்யமாக பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் இருந்தார். இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கும் முறையே 74 செ.மீ [2,43 அடி], மற்றும் 53 செ.மீ. [1.74 அடி] உயரத்தில் செப்புச் சிலைகளை செய்கிறார். ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம். ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார் ஶ்ரீகார்யம். இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது. ஆனால், இப்பொழுதுள்ள பதுமைகளின் உயரம் மாறுபடுகிறது. சோழர்கால அத்தாட்சிகள், ஆதாரங்களை திட்டம் போட்டுத்தான், மேனாட்டவர் அழித்து, மறைத்து வருகின்றனர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.  வரலாற்று-வரைவியல் எனும் போது, சோழர்களின் மேன்மை, உயர்வு, சிறப்பு என்று விவரங்கள் வரும்போது, எதிர்மறையான திரிபுவாதங்களினால், திசைத் திருப்பி வருவதால், உண்மை சரித்திரம் முழுவதும் வெளிவராமல், ஆவணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

Calico Museum-Sarabhai foundation-karunanidhi politics
உண்மையான பதுமைகள் காணாமல் போனது: ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றன என்று சண்முகசுந்தரம்[1] சொன்னாலும் விவரங்களைக் கொடுக்கவில்லை. அதன்பிறகு அங்கிருந்து எப்படியோ கடத்தப்பட்டு விட்டதால் புதிய சிலைகளை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள், என்கிறார். 1940களில் சென்னையில் அது சாராபாயுக்கு விற்கப்பட்டது. கடத்தப்பட்டது ராஜராஜன் சிலை என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள். ஒரிஜினல் ராஜராஜன் சிலையானது இப்போது அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டேஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் மியூசியத்தில் ராஜராஜன் – லோகமாதேவி சிலைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜ ராஜன் சிலைக்கு காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காக பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு 1984ல் அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையை கிளப்பினார்.

Thennarasu meets Modi Sep.2010, The Hindu

குஜராத் சென்ற தமிழகக் குழு [செப்டம்பர் 2010]: இதுவே பெரும் சர்ச்சையாகிப் போகவே, ராஜராஜனை மீட்டுவர இந்திராவும் எம்.ஜி.ஆரும் முயற்சி எடுத்தார்கள். அத்தனையும் தோற்றுப்போன நிலையில், 2010-ல் தஞ்சை பெரியகோயில் எழுப்பப் பட்டு, ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவின்போது ஆட்சியில் இருந்த திமுக, ராஜராஜன் சிலையை மீட்கும் முயற்சிகளில் இறங்கியது. கருணாநிதி மோடிக்கு சிலைகளை பரிசாகக் கொடுக்கும் படி வேண்டுக் கொண்டார்[2]. அவரும் ஆவண செய்ய உறுதி அளித்தார். காலிகோ அருங்காட்சியக இயக்குனர் மெஹ்தா [Calico Museum director D S Mehta] ஆதாரங்கள் காட்டினால் கொடுத்து விடுவதாக வாக்களித்தார்[3]. இதற்காக, அப்போதைய சுற்றுலாத்துறைச் செயலாளர் வெ.இறையன்பு, கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி, குடவாயில் பால சுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கொண்ட குழு ஒன்று குஜராத் சென்றது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியயை 25-09-2010 மற்றும் 26-09-2010 தேதிகளில் சந்தித்துப் பேசியது[4]. ராஜராஜன் சிலையை தமிழகத்துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார்[5]. குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் அப்போது இவ் விஷயத்தில் ஆர்வம் காட்டினார்கள். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா?

Calico museum, sacred bronzes from South India
ராஜராஜன் சிலைதான்: டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், தான் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள் குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள் பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் – லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று தெள்ளத்தெளிவாக குறிப் பிட்டிருக்கிறார் முனைவர் நாக ஸ்வாமி. ஆனால் பிற்பாடு, காலிக்கோ மியூசியத்தில் உள்ள சோழர் காலத்து செப்புச் சிலைகள் குறித்து அந்த மியூசியத்திற்கு ‘கேட்லாக்’ எழுதிக் கொடுத்த நாகஸ்வாமி, முன்பு ராஜராஜன் என்று தான் தெரிவித்த அதே சிலையை, ‘கிங்க் ஆஃப் கிங்ஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் பேசிய காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்று நாகஸ்வாமி கூறினால், இப்போதே சிலையை உங்களிடம் ஒப்படைக்கத் தயார்’ என்று கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழக குழுவினர் அதீத ஆர்வத்துடன் நாகஸ்வாமியின் முகத்தைப் பார்த்தார்கள். பிறகு என்ன நடந்தது?

Calico Museum-Sarabhai foundation-Nagaswamy changed stand

நாகசாமியின் சங்கடமான நிலை: ராஜராஜன் சிலை தஞ்சை பெரிய கோயிலில் இருந்ததுதான் என நாகஸ்வாமி நிச்சயம் உறுதிப் படுத்துவார் என்று தமிழகக் குழுவினர் ஆவலோடு எதிர் பார்த்திருந்த நிலையில், ‘இது ராஜராஜன் சிலை இல்லை’என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார் நாகஸ்வாமி[6]. அமைச்சர் தங்கம் தென்னரசு நாகஸ்வாமியிடம் தனியாகப் பேசிப் பார்த்தபோதும், ‘அது ராஜ ராஜன் சிலை’ என்று உறுதிப் படுத்த மறுத்துவிட்டார்[7]. அதற்கு மேல் எதுவும் பேசமுடி யாமல் போனதால், வெறும் கையுடன் வீடு திரும்பியது தமிழகக் குழு. ‘இந்த முரண்பாடு ஏற்பட்டது ஏன்?’ என நாகஸ்வாமியிடம் கேட்ட தற்கு, ‘‘டெல்லி மியூசியத்துக்கு நான் நூல் எழுதியபோது, சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என ஒரு ஊகத்தின் அடிப்படையில்தான் எழுதிக்கொடுத்தேன். ஆனால், சிலையை நேரில் பார்த்த பிறகு மாற்றுக் கருத்து வந்துவிட்டது[8]. மியூசியத்தில் இருப்பது சோழர் காலத்துச் செப்புச் சிலைதான். ஆனால், அது ராஜராஜன் சிலை என்பதற்கு உரிய ஆதாரம் இல்லை. அந்தக் காலத்தில் சண்டிகேஸ்வரர் சிலைகளைக் கூட இதே தோற்றத்தில் செய்திருக்கிறார்கள்[9]. அப்படி இருக் கும்போது, அது ராஜராஜன் சிலை என்பதை எப்படி உறுதிப் படுத்த முடியும்? அந்தச் சிலை தஞ்சையில் இருந்தது என்பதற் கான அடையாளமோ, அது அங்கிருந்து காணாமல்போனது குறித்து புகார் செய்யப்பட்டதற் கான ஆதாரமோ இல் லாதபோது, எந்த அடிப் படையில் அது ராஜராஜன் சிலைதான் என நாம் உரிமை கொண்டாட முடியும்?’’ என்றார்.

© வேதபிரகாஷ்

04-06-2018

Timeless Delight - -Nagaswamy changed stand

[1] தி.இந்துவில் இதைப் பற்றி எழுதியவர். முன்பு ஆங்கில இந்துவில் வந்ததைத் தொகுத்து தமிழில் எழுதியது.

[2] Times of India, TN team meets Modi to get back Rajaraja statue, Ajitha Karthikeyan | TNN | Sep 7, 2010, 23:24 IST.

A day after calling on Modi and apprising him of the significance and sensitivities attached to the Chola statue, the team visited the Calico Museum of Textiles on Tuesday and handed over a letter written by chief minister M Karunanidhi, requesting the museum authorities to “gift” the statue to the state.

[3] https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/TN-team-meets-Modi-to-get-back-Rajaraja-statu/articleshow/6515415.cms

[4] DeshGujarat, Tamil Nadu minister meets Modi, seeks Rajaraja, Lokamadevi statues, September, 06, 2010.

[5] http://deshgujarat.com/2010/09/06/tamilnadu-minister-meets-modiseeks-rajarajalokamadevi-statues/

[6] தி.இந்து, சிலை சிலையாம் காரணமாம் – 23: செப்பேடுகளின் நிலை!, குள.சண்முகசுந்தரம், Published : 06 Aug 2016 10:06 IST; Updated : 14 Jun 2017 17:11 IST.

[7]http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article8952097.ece

[8] தி.இந்து, சிலை சிலையாம் காரணமாம் – 22: தஞ்சை ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்!, குள.சண்முகசுந்தரம், Published : 05 Aug 2016 10:13 IST; Updated : 14 Jun 2017 17:08 IST.

[9] http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-22-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8946944.ece?widget-art=four-rel

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in உலக மாதேவி, உலோகமாதேவி, கற்கோவில், சிலை, செப்பு மேனி, சோழர், சோழர்கள், தஞ்சாவூர், தஞ்சை, தமிழ் கல்வெட்டு, தாமிர பட்டயம், திருலோக்கி, திரைலோக்யமாதேவி, தேவி, நாகசாமி, நாகசுவாமி, நாகஸ்வாமி, படிமை, பதுமை, ராஜராஜன், ராஜேந்திரன், விக்கிரகம், ஸ்தபதி and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக