“ராஜராஜ சோழன் – லோகமாதேவி பதுமைகள் மீட்பு”: திருட்டு, கடத்தல், துறை ஊழியர்கள்-அதிகாரிகளின் குற்றங்கள் மறைப்பு முதலியவற்றை வெளிப்படுத்துகின்றன – தடுக்க செய்ய வேண்டியது என்ன?

ராஜராஜ சோழன்லோகமாதேவி பதுமைகள் மீட்பு”: திருட்டு, கடத்தல், துறை ஊழியர்கள்-அதிகாரிகளின் குற்றங்கள் மறைப்பு முதலியவற்றை வெளிப்படுத்துகின்றன – தடுக்க செய்ய வேண்டியது என்ன?

Anti-hindu forces -DK-DMK-communitcoming together-exhibiting tendencies

உண்மை பதுமைகள், போலி பதுமைகள் 1900 முதல் 1940 வரை எவ்வாறு செய்யப்பட்டன, மாற்றி வைக்கப் பட்டன?: மேலே குறிப்பிட்ட நிகழ்சிகளை உன்னிப்பாக, படித்தால், காலக்கிரமத்தில், பதுமைகளைப் பற்றிய விவரங்களை, இவ்வாறு கொடுக்கலாம்:

  1. ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி, சங்கராச்சாரியார், இப்பதுமைகள் தங்கத்தினால் செய்யப்பட்டவை என்றார். அப்படியென்றால், ஆங்கிலேயர் முன்னமே அவற்றை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்
  2. அத்தகைய பதுமைகள் நிறைய இருந்திருந்ததனால், தங்கப் பதுமைகளுக்குப் பதிலாக, பஞ்சலோகப் பதுமைகளை ஆங்கிலேயர் வைத்திருக்கலாம்.
  3. 1900ம் ஆண்டு வரை தஞ்சை பெரியகோயிலில் ராஜராஜன், உலகமாதேவி இருவரின் திருமேனிகளும் இருந்துள்ளன.
  4. இவற்றின் அனைத்துலக மதிப்பு அறிந்து, அருங்காட்சியகத்தில் உள்ளவர் அல்லது அறநிலையத் துறையினர், போலிகளைத் தயாரித்து வைத்து, அங்கிருந்தவற்றை விற்க ஏற்பாடு செய்திருக்கலாம்.
  5. ஆக, இதில் பலரின் / பல துறைகளின் / அத்துறைகளில் வேலை பார்ப்போரின் தொடர்புகள் இருப்பது தெரிகிறது.Rajaraja cholas ruked as slaves of Brahmins-Vinavu
  6. 1925ல் சென்னை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டி.ஜி.ஆராவமுதன் என்பவர் இருந்த பதுமையை ஆய்ந்து, கல்வெட்டில் சொல்லப்பட்டிருக்கின்ற அளவுகளோடு, பெருங்கோவிலில் உள்ளது உண்மையானதல்ல என்று எடுத்துக் காட்டினார்[1].
  7. அப்படியென்றால் 1925-1940 களில் இன்னொரு முறை, பதுமைகள் மாற்றம் நடந்திருக்க வேண்டும்.
  8. 1940ல் இவை சென்னையில் சாராபாயுக்கு விற்றதாகத் தெரிகிறது – தஞ்சை கபிஸ்தலம் அருகேயுள்ள சறுக்கை கிராமத்தை சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் சென்னையில் கௌதம் சாராபாய் என்பவரிடம் விற்றுள்ளார்.
  9. டக்ளஸ் பேரட் [Douglas Barrett] என்பவர் கோவிலில் உள்ளது மற்றும் சாராபாய் அருங்காட்சியகத்தில் இருப்பது, இரண்டுமே உண்மையானல்ல என்றார். கல்வெட்டு விவரம் படி உயரம் 24 அங்குலம் இருக்க வேண்டும், ஆனால், சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளது 29 அங்குலம் உயரம் உள்ளது[2]. ஆக, இரண்டுமே போலியானது என்றாகிறது.
  10. ஆக உண்மை பதுமைகளை கடத்தி சென்று விற்பதற்காக, போலி பதுமைகள் உருவாக்கும் கூட்டம் ஒன்று செயல்படுவதும் தெரிகிறது.

Anti-hindu forces -coming together-exhibiting tendencies

திருடியதுகடத்தியது எனறால் தேசவிரோத சக்திகளின் பங்கு, கூட்டு தெரிகிறது: தாலிபான், ஐசிஸ் போன்றவை தமது தீவிரவாத செயல்களுக்கு பலவிதங்களில் பணம் கொண்டு – பெற்று வருகின்றன. அவற்றில் ஒன்று புராதனப் பொருட்களை திருடுவது, கடத்துவது மற்றும் விற்பது ஆகும். அதேபோலத்தான், தமிழகத்தில் குறிப்பிட்ட கூட்டங்கள் வேலைசெய்து வருகின்றன. நகராக்கம், நகர விரிவாக்கம் என்பது கடந்த 50 ஆண்டுகளாக அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான புராதன கோவில்கள், கட்டிடங்கள் முதலியவை தொலையிடங்களில், காடுகளில், மலைகளில் இருக்கின்றன, சாதாரண மக்கள் அணுகும் வகையில் இல்லை. போக்குவரத்து இல்லை அல்லது குறைவு. மேலும், அவற்றிற்கு பாதுகாப்பும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், செல்லலாம், போகலாம். ஆகவே, அவை சமூகவிரோதிகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் போன்றோர் தங்கி வாழும் பகுதிகளாக இருந்து வருகின்றன. பக்தர்கள் மற்றும் சுற்றுலா வருவோரின் வசதிகளை ஓரளவிற்குக் கொடுத்து, அதில் வரும் பணம் மற்றும் பண பரிவர்த்தனை மூலம் அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இங்குதான் சிலைகள், சிற்பங்கள், கல்வெட்டுகள், விக்கிரங்கள் முதலியவற்றைத் திருடுவதில் சுலபமாக அவர்கள் செயல்படுகின்றனர்.  வெறும் திருடிக் கொண்டு வந்தால் மட்டும் போறாது, அவை விற்கப்பட வேண்டும் அப்பொழுது தான் காசு கிடைக்கும். இங்கு தான் பலரின் தொடர்புகள் வருகின்றன.

Anti-hindu forces -exhibiting tendencies

கடத்தல்காரர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் போலீஸாரின் தொடர்புகள்: அகழ்வாய்வுத் துறை மற்றும் அருங்காட்சியங்களில் இருக்கும் துரோகிகள், ஒற்றர்கள் மற்றும் வஞ்சகர்கள் இவர்களுடன் சேர்ந்து கொண்டு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மறைமுகமாக சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள், அகழ்வாய்வுத் துறை வல்லுனர்கள், தொல்லியல் விற்பன்னர்கள், ஆராய்ச்சியாளர்கள் ன்று பலர் உதவி வருகின்றனர். அடையாளம் காட்டுவது, சான்றிதழ்கள் கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து, காரியங்களை சாதிக்கின்றனர்[3]. அதனால் தான், இவை 60 ஆண்டுகளாக தாராளமாக, அமைதியாக நடந்து வருகின்றன. நாத்திக ஆட்சியாளகளின் காலத்தில், நாத்திகர், இந்துக்கள்-அல்லாதோர் முதலியவர் அத்துறைகளில் பதவிகளுக்கு வரும் போது, திட்டம் போட்டே வேலை செய்து வருகிறார்கள். இதனால் தான் “கபூர்” போன்றவர்களின் மூலம் விவகாரங்கள் தெரிய வருகின்றன. போலீஸ் உதவி கமிஷனர் மொஹமது விசயத்தை ஞாபகத்தில் கொண்டால் விளங்கும். திலகவதி காலத்திலேயே பல மோசடிகள் நடந்தன. அவ்வப்போது, போலீஸ் பாணியில், ஒருசிலவற்றைப் பிடித்தது போல காண்பித்துக் கொண்டு, செய்திகளில் வரும்படி செய்வர். அதாவது, 10 பிடித்தார்கள் என்றால் 990 போய் விட்டன, விட்டுவிட்டார்கள்  என்று அர்த்தம்.

Anti-hindu forces -DK-DMK-coming together-exhibiting tendencies

எப்படி இந்த அவலங்களை நீக்குவது, சீர்செய்வது: குறிப்பிட்ட எல்லோரையும் மாற்ற வேண்டும், மாற வேண்டும் என்றால், பலவற்றை செய்ய வேண்டியுள்ளது.

  1. மக்களிடத்தில் நியாயம், தர்மம், சட்டங்களை மதித்தல், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் இவற்றைப் போற்றுதல் முதலியவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  2. இதை மதம், மதம் சம்பந்தப் பட்ட விவகாரங்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. செக்யூலரிஸம் பேசி மக்களை ஏமாற்றவோ, குழப்பவோ முடியாது.
  3. பெரியாரிஸம், அம்பேத்கரிஸம், கம்யூனிஸம், மாவோயிஸாம், நக்சலிஸம் என்றேல்லாம் பேசி, மக்களை, இளைஞர்களை திசைத் திருப்புவது, எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவது முதலியவற்றை தடுக்க வேண்டும்.
  4. தமிழ்-தமிழ் என்று பேசிக் கொண்டு, பிரிவினையை வளர்ப்பதை விட, தமிழ்-கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றின் மூலங்களைப் பற்றி கற்றுக் கொடுக்கப் படவேண்டும்.
  5. மொழிகள் பல இருந்தாலும், இப்பொழுதைய “இந்தியா” அல்லது பாரதம், நிச்சயமாக 5000 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒத்த கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் போன்ற காரணிகளால் ஒன்றாக இருந்துள்ளது.
  6. கோவில், கோவில் கட்டுதல், கோவில் சம்பந்தப் பட்ட வேலைகளில் ஈடுபடுதல், முதலியவற்றில் எல்லா மக்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
  7. கோவில் இருப்பிடம், இயற்கையானது, இயற்கையைப் போற்றுவது. ஆனால், இன்றைக்கு கோவில் சுற்றியுள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு, கோவிலையே கபள்:ஈகரம் செய்யும் வகையில், கடைகள், லாட்ஜுகள், வீடுகள் முதலியவை வந்துவிட்டன. ஊழல் இங்கேயே ஆரம்பித்தது. முதலில் கொஞ்சம்-கொஞ்சமாக, இவை அகற்றப்படவேண்டும்.
  8. “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்,” என்றால், கோவில் இல்லாமல் ஊர் இருக்காது, மக்கள் இருக்க மாட்டார்கள் என்று பொருள்.
  9. எந்த தமிழனும் இதனை மறந்து வாழ முடியாது. “கோவில்-ஊர்-குடி” என்றதில் தான் சமத்துவம் நிலைபெற்றது. அதை தாக்கி-சிதைத்தபோது, வலுவிழந்து, சீர்குலைய ஆரம்ப்பித்தது. ஆகவே, அதனை எதிர்க்க வேண்டும்.
  10. பாடதிட்டங்களில் சேர்க்கவேண்டும், சுற்றுப்புற சூழ்நிலை பாடங்களில், கோவில்-குளம், நந்தவனங்கள், காடுகள் வளர்ப்பு போன்றவற்றைப் பற்றி விளக்க வேண்டும். பலவித இலைகள், தழைகள், பூக்கள், விதைகள் முதலியவை கிரியைகள், சடங்குகள், பண்டிகைகளில் உபயோகப்படுத்தும் முறைகள் விளக்கப் பட வேண்டும்.

© வேதபிரகாஷ்

04-06-2018

Anti-hindu forces joining together- Vaikunda group

[1] The Hindu, Debate over two 11th century Chola icons, A. Srivathsan CHENNAI:, SEPTEMBER 09, 2010 23:11 IST; UPDATED: OCTOBER 27, 2016 14:14 IST.

[2] http://www.thehindu.com/features/friday-review/art/Debate-over-two-11th-century-Chola-icons/article12060904.ece

[3] அத்தகைய கேவலங்களில் ஒரு சிறிய வெளிப்பாடு தான் “நிர்மலா தேவி” விவகாரம் எனலாம். இது வரை மறைக்கப்பட்ட விவகாரங்கள் எத்தனையோ இருக்கின்றன.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in உலக மாதேவி, உலோகமாதேவி, கற்கோவில், கல்வெட்டு, சதுர்வேதி மங்கலம், சிற்பம், சிலை, செப்பு மேனி, சோழர், தஞ்சாவூர், தஞ்சை, தமிழ் கல்வெட்டு, திருலோக்கி, நாகசாமி, நாகசுவாமி, நாகஸ்வாமி, படிமை, பட்டயம், பதுமை, பெரிய கோவில், மாதேவி, ராஜராஜன், ராஜேந்திரன், லேடன், லோகமாதேவி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக